எந்தக்காலத்திலும் இலங்கை இந்தியாவிடம் மண்டியிட்டதுமில்லை, இனியும் அதற்கு சந்தர்ப்பமே இல்லை, அதிலும் இலங்கையில் புலிப்பயங்கரவாதத்தினை ஆணிவேருடன் பிடுங்கி அழித்தொழித்து சாதனை படைத்து
Archive for the '103' Category
மண்முனை தென் எருவில்பற்று சிவில் பாதுகாப்பு குழு தலைவராக திரு.உ.உருத்திரன் (வீரா) தெரிவு.
August 5, 2009அண்மையில் மண்முனை தென் எருவில்பற்று சிவில் பாதுகாப்புக் குழு தலைவராக திரு.உ.உருத்திரன்(வீரா) அவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள், அத்தோடு அவர் சிறிலங்கா சுகந்திரக்கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச அமைப்பாளராக அண்மையில் அலரி மாளிகையில் வைத்து அதி உத்தம ஜனாதிபதியிடமிருந்து நியமனத்தினைப் பெற்றுக்கொண்டார். மேலும் இவர் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) அவர்களின் மேற்படி பிரதேச இணைப்பாளராக அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
தமிழலை சித்தாண்டி நிருபர்.
அம்பாறை மாவட்ட தம்பிலுவில் பிரதேச “சிவதொண்டர் அமைப்பு” கிழக்கின் விடிவெள்ளி கௌரவ கருணா அம்மானிடம் விடுக்கும் மன்றாட்டான வேண்டுகோள்.
August 5, 2009சிவதொண்டர் அமைப்பு –
அம்பாறை மாவட்டம், தம்பிலுவில்.
எமது அமைப்பானது 1999 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சமய, சமூக கலாச்சாரப்பணிகளை செய்து வருகின்றது. இவ்வமைப்பானது 2004 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பல்வேறு சேவைகளை செய்துவருகிறது மேலும் இவ்வமைப்பின் பாரிய சேவை கல்முனை தொடக்கம் யால வரையான காட்டுப்பகுதிகளில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து வருவது வழக்கமாகும். இச்சேவையினை 2001 ம் ஆண்டு தொடக்கம் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சிறி உகந்தை மலை முருகன் ஆலயத்தின் உற்சவ [...]

