
தமிழீழ விடுதலைப்புலிக்கெதிரான இலங்கை இரானுவத்தினரின் போர் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்டு வவுனியா அகதி முகாம்களில் தங்கவைக்ப்பட்டுள்ள வன்னி நிலப்பரப்பை சேர்ந்த தமிழ் மக்கள் விரைவில் அவர்களின் சொந்த இடங்களுக்கே அனுப்பிவைக்கப்படவுள்ள நிலமையில் சில அமைப்புகளின் மூலம் சட்டத்திற்கு முரணான முறையில் வெளியேறிகொண்டு வருகிறார்கள். இவ்வாறு தவறான முறையில் அகதி முகாம்களை விட்டு வெளியேறுவதானது எதிர்காலத்தில் வெளியேறும் உங்களுக்கும் உங்களினது எதிர்கால சந்ததிகளுக்கும் பாதுகாப்பு தரப்பால் சட்டரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்தும் நடவடிக்கையின் ஆரம்பமாக வவுனியா முகாம்களிலுள்ள கிழக்கு மாகாணத்தை பிற்ப்பிடமாக கொண்ட மக்களின் ஒரு தொகுதியினர் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளர்.
மீதியாக உள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் இரண்டாம் கட்டமாக அழைத்துவரப்படவுள்ளனர். இவ்வாறு வன்னிமக்களையும் அவர்களது வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியமறவைக்கும் முயற்ச்சியில் எமது தமிழ் மக்களுக்கு அன்றும் இன்றும் ஓர் உறுதியான தலைமைத்துவத்தில் இருக்கும் கருணா அம்மான் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
விரைவில் வன்னி பிரதேசத்தில் பதிக்கி வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் , வெடிப்பொருட்கள் முற்றாக அகற்ப்பட்டு எல்லா வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யப்பட்ட அவர்களின் சொந்த மண்ணில் எமது தமிழ் உறவுகளை மீள்குடியமர்த்த வேண்டும் என்பது கருணா அம்மான் அவர்களின் இலட்சியப்பாதையில் ஒன்று..
இது இவ்வாறு இருக்க இன்று வவுனியா பிரதேசங்களில் செயற்பட்டுக்கொண்டு வரும் சில அமைப்புகள் முகாம்களிலுள்ள மக்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை வேண்டிக்கொண்டு சட்டத்துக்கெதிரானமுறையில் மக்களை வெளியேற்றிக் கொண்டுவருகிறார்கள். இவர்களின் இவ்வாறான சட்டத்திக்கு முரனான வெளியேற்றத்தினால் பாதிக்கப்படுவது..
வெளியேறிய நீங்களும் முகாம்களில் மீதியாகவுள்ள உங்கள் உறவுகளும்தான்.. ஆகவே எம் அன்பிறக்கினிய தமிழ் உறவுகளே அன்று எம்மை தமிழீழம் என்ற மாயையின் மூலம் ஏமாற்றி எமது மக்களை காட்டிலும் மேட்டிலுமாக அலைவிட்டு குதுகலம் அடைந்த பிரபா கூட்டம் இன்று வேரோடு அழிக்கப்பட்டுவிட்டது. எமது மக்களுக்கு உதவாத தலமைத்துவம் யாருக்கு வேண்டும்…
அன்று எமது மக்களுக்காக நாம் காட்டிலும் மேட்டிலுமாக 30 வருடங்கள் களத்தில் நின்று சண்டைபிடித்து உறவுகளையும் உயிர் நண்பர்களையும் பறிகொடுத்ததுக்காக பிரபாபின் தலமைத்துவம் விட்டுச்சென்ற தடையம்தான் என்ன தனது மனைவி பிள்ளைகளுடன் கூத்து கும்மாளம், எமது பிள்ளைகள் குண்டும் குற்றுயிறுமாக.. எனவே தான் கருணா அம்மான் அவர்கள் பிரபாவின் தலைமைத்துவத்தை தூக்கெறிந்துவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்திக்கு வந்தார்.
வந்தது மட்டுமல்லமால் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவைசெய்து வருகிறார். இதனை பொறுக்க முடியாத புலிப்பிணாமிகள் இவ் சேவையை குழப்பும் சதிவேளைகளையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். என்னதான் இவர்கள் தடைகள் போட்டாலும் அதனை உடைத்தெறிவோம்… அன்று எதிரிகளின் தடைகளை ஓர் நொடப்பொழுதில் தகர்ந்தெரிந்த கருணா அம்மான் அவர்களுக்கு இவர்கள் செய்யும் சதி கால் தூசிக்கு சமன்.. முகாம்களிலுள்ள தமிழ் உறவுகளே 30 வருடங்கள் பொறுத்த உங்களுக்கு 3 மாதங்கள் பொறுப்பது கடினமா.. “பொறுத்தார் பூமியாழ்வார்” என்பதற்கினங்க எமது கருணா அம்மானுடன் சற்று பொறுத்திருந்து எமது உரிமைகளை வென்றெடுப்போம்…
நன்றி –
யூலியன் ஞானப்பிரகாசம் ஊடக செயலாளர்
மற்றும் மட்டு மாவட்ட பிரதி அமைப்பாளர்
தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சு

